Connect with us

திருச்சியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் சுட்டுக்கொலை..!!

Featured

திருச்சியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் சுட்டுக்கொலை..!!

திருச்சியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் 11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் 30 வயதான இவர் பொறியியல் பட்டதாரி . இவர் தனது 18 வயதில் இருந்தே நண்பர்களுக்காக கட்டப்பஞ்சாயத்து , அடிதடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குற்றம் செய்வதில் படி படியாக வளர்ந்த இவர் தற்போது ஆல் கடத்தல் , அடிதடி , கட்டப்பஞ்சாயத்து , திருட்டு , வழிப்பறி,கொலை , கொள்ளை என அனைத்து குற்ற சம்பவங்களிலும் கைதேர்ந்த பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் ரவுடி ஜெகன் மீது திருவெறும்பூர், லால்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன நிலையில் அவரை கைது செய்ய எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெகனை பிடிக்க போலீசார் சென்றபோது, ரவுடி ஜெகன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார் . இந்த தாக்குதலில் எஸ்ஐ வினோத் காயம் அடைந்த நிலையில் தற்காப்புக்காக ரவுடி ஜெகனை போலீசார் சுட்டுள்ளனர் . இந்த என்கவுண்டரில் கொம்பன் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் சரக டி.ஐ.ஜி பகலவன் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார் . அங்கு ஜெகன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்ககள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top