Connect with us

பேட்டிங்கில் மிரட்டிய விராட் கோலி – கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு..!!

Featured

பேட்டிங்கில் மிரட்டிய விராட் கோலி – கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது .

இதையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணியின் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் 2வது ஓவரிலேயே சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

மறுபுறம் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அணிக்கு தேவையான ரன்களை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார் . ஆனால் மறுபுறம் ஆடிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதி வரை சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்களை குவித்து களத்தில் கெத்தாக இருந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 182 ரன்களைச் குவித்துள்ளது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

More in Featured

To Top