Connect with us

பல கோடி மோசடி வழக்கு: ரவீந்தரை கைது செய்ய வந்த மும்பை போலீஸ் – பரபரப்பு சம்பவம்!

Featured

பல கோடி மோசடி வழக்கு: ரவீந்தரை கைது செய்ய வந்த மும்பை போலீஸ் – பரபரப்பு சம்பவம்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், விமர்சகராகவும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் அறிமுகமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த பிறகு, சமூக வலைதளங்களில் மேலும் பரிச்சயமான முகமாக மாறினார்.

இவர்கள் இருவரும் காதலித்தார்களா அல்லது திருமணம் கட்டாயமா என்பதைக் குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துகளை வெளியிட்டிருந்தனர். ஆனால், காதலுக்கும் தோற்றத்துக்கும் இடையே ஒற்றுமை தேவை இல்லை என்பதை இந்த ஜோடி நிரூபித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பங்குச் சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் எனச் சொல்லி, மும்பையைச் சேர்ந்த அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்ததாக ரவீந்தர் சந்திரசேகர்மீது மும்பை போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்பாக அவரை கைது செய்ய மும்பை போலீசார் சென்னைக்கு வந்திருந்தனர். எனினும், ரவீந்தரின் உடல்நிலை தாழ்வாக இருந்த காரணத்தால், அவரை கைது செய்யாமல், அவருக்கு சம்மன் கொடுத்துச் சென்றுள்ளனர். 

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top