Connect with us

கழுத்தில் மாலையுடன் ரவி மோகன் – கெனிஷா: வைரல் போட்டோ!

Featured

கழுத்தில் மாலையுடன் ரவி மோகன் – கெனிஷா: வைரல் போட்டோ!

ரவி மோகன் சமீபத்தில் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் பின்னணி பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் வந்திருந்தார். இதையடுத்து, ஆர்த்தி அவர் விவாகரத்து செய்யப்படுவதாக அறிவித்து, நீதிமன்றத்துக்கும் சென்றிருந்தார்.

சூழல் இப்படியிருக்கும் போது கெனிஷா மற்றும் ரவி மோகன் இணைந்துவந்தது தமிழ் சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் சர்ச்சைகளில் பெரிதும் சிக்காமல் இருந்த ரவி மோகன் இப்போது சர்ச்சையின் நாயகனாக மாறியுள்ளார். ஆர்த்தியுடன் பிரிவை அறிவித்த பிறகு, அவர்களை இணைத்து பேச முயன்றாலும், ரவி மோகன் அதை முறையாக மறுத்து விளக்கமளித்துள்ளார்.

ஆர்த்தி எமோஷனல் என்கிறார், அந்த சர்ச்சை கொஞ்சம் தணிந்த பின்னரே ரவி கெனிஷாவுடன் திருமணத்திற்கு வந்தார். அந்த வருகையைப் பார்த்து ஆர்த்தி மனநிலையில் பாதிக்கப்பட்டு, ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் “அவர் நழுவி சென்றுவிட்டார். என் பெயர் இன்னும் ஆர்த்தி ரவிதான். நீதிமன்றம் முடிவு செய்யும் வரை எனது முன்னாள் கணவனாக மட்டுமே அடையாளப்படுத்துங்கள். ஒரு தாயாக நான் குரல் எழுப்புகிறேன்” என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதன்பிறகு, ரவி மோகன் பல நூறு கோடி ரூபாய் கடனுக்கு அவர் பொறுப்பேற்க வைத்து இருப்பதாகவும், தனது குழந்தைக்கு நடந்த விபத்தை மறைத்து வைத்ததாகவும், தந்தை மற்றும் தாய்க்கு பணம் கொடுக்க அனுமதிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆர்த்தியின் அம்மா சுஜாதா ஒரு விளக்கம் வெளியிட்டார். அவர், “ரவியை நான் ஹீரோவாக அல்லது மாப்பிள்ளையாக மட்டுமே பார்க்கவில்லை. மகனாகவே பார்க்கிறேன். ஒரு மகளை இவ்வாறு வாழாத நிலைக்கு வந்ததை ஒரு தாய் மட்டுமே உணர முடியும். ரவியை நான் கடனுக்கு பொறுப்பேற்க வைத்திருப்பதாக கூறியதற்கான ஆதாரம் அவரிடம் வேண்டும். நான் கொடுமை செய்கிற மாமியார் அல்ல” என்று கூறி எமோஷனலாக தெரிவித்தார். இவ்வாறு இரு தரப்பும் அறிக்கைகள் வெளியிட்டு வந்ததால், நீதிமன்றம் தலையிட்டு இந்த விவகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

மேலும், ஆர்த்தி மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், ரவி மோகன் மற்றும் மோகன் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் குன்றக்குடி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த போது எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “என்னதான் திடீர்னு இருவரும் மாலை மற்றும் கழுத்துமாடி அணிந்திருக்கிறார்கள்? என்ன விஷயம்?” என்ற கமெண்ட்கள் எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, கெனிஷா ஒரு பேட்டியில், “நான் என் சோல் மெட்டை கண்டுபிடித்தேன். இவர் ரொம்ப அக்கறை மற்றும் பாதுகாப்பாக உணர வைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். பேட்டி மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் அவர் போடும் பதிவுகளும் அதிக கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top