Connect with us

இன்று வெளியாகிய ‘தக் லைஃப்’ – இணையத்தில் வைரலாகும் மேக்கிங் வீடியோ!

Featured

இன்று வெளியாகிய ‘தக் லைஃப்’ – இணையத்தில் வைரலாகும் மேக்கிங் வீடியோ!

இந்தியா திரைப்படத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “தக் லைஃப்” படம் இன்று பெரும் விமர்சனத்துடன் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்திருக்கும் இந்த பிரம்மாண்டப் படத்தில், சிம்பு மற்றும் த்ரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.

இப்படம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், “கன்னடம் தமிழில் இருந்து வந்தது” என கூறியதுதான் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், “தக் லைஃப்” படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் இந்த வீடியோவை ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top