Connect with us

‘தலைவர் 171’ படத்தில் ரத்னகுமார் இல்லையா?! காக்கா கழுகு பிரச்சனையை தடுத்த லோகேஷ் கனகராஜ்..!

Cinema News

‘தலைவர் 171’ படத்தில் ரத்னகுமார் இல்லையா?! காக்கா கழுகு பிரச்சனையை தடுத்த லோகேஷ் கனகராஜ்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’மாஸ்டர்’, ’விக்ரம்’ மற்றும் ’LEO’ ஆகிய மூன்று படங்களிலும் ரத்னகுமார் பணிபுரிந்தார் என்பதும் லோகேஷ் கனகராஜின் திரைக்கதை வசனத்தில் அவர் உதவியாக இருந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தலைவர் 171’ திரைப்படத்தில் ரத்னகுமார் பணி புரியவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

ரத்னகுமார் தனியாக படம் இயக்கப் போவதை அடுத்து அவர் இந்த படத்தில் பணி புரியவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேற ஒரு எழுத்தாளரை தேர்வு செய்ய உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே ’தலைவர் 171’ திரைப்படத்தில் ரத்னகுமார் பணிபுரியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ’LEO’ வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார் கழுகு-காக்கா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ஓம்’ முதல் நாள் வசூல் ரூ.17.70 கோடி: தனுஷ் படத்தின் இந்திய, உலகளாவிய நிலவரம்

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top