Connect with us

எனக்கும் என் தங்கைக்கும் 16 வருடங்கள் இடைவெளி – ராஷ்மிகா மந்தனாவின் உணர்வான பகிர்வு..

Featured

எனக்கும் என் தங்கைக்கும் 16 வருடங்கள் இடைவெளி – ராஷ்மிகா மந்தனாவின் உணர்வான பகிர்வு..

நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமானார். பின்னர், தெலுங்கு சினிமாவிலும் வெற்றி பெற்ற இவர் பாலிவுட் திரையுலகிலும் தன்னுடைய கால் பதித்தார்.

அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். புஷ்பா 2 உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா தனது தங்கை ஷிமன் மந்தனா குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில், “எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. எங்கள் இருவருக்கும் இடையே 16 வருடங்கள் உள்ளன. ஒரு சமயம் வரை நான் அவளுடைய அக்கா என்று சொல்லாமலே வளர்த்தோம். என் பெற்றோர்கள் எங்களை அதில் ஈடுபடுத்தாதே என்று அடிக்கடி சொல்வார்கள். என் தங்கை நினைத்தால், அவளுக்கு எதுவேனும் கிடைக்கும்.

ஆனால், அவளுக்கு எல்லாமே எளிதாக கிடைக்க கூடாது. நான் இப்படி வளர்ந்த காரணம், நான் அவ்வாறு வளர்க்கப்பட்டேன். அவளும் அதுபோலவே இருக்க வேண்டும். ஆனாலும், அவளுக்கு குறித்த வயது ஆனதும், நான் நிறைய பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுப்பேன்” என கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top