Connect with us

“லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாவது சந்தேகம்தான் போல..! இதுதான் காரணமா?!”

Cinema News

“லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாவது சந்தேகம்தான் போல..! இதுதான் காரணமா?!”

ஜெயிலர் படம் கொடுத்த சூப்பர் ஹிட்டை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் சூட்டிங் மும்பை, திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று தெரியவருகிறது.

படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த மும்பை சூட்டிங்கின் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தற்போது செயல்படாததால் அதன் காட்சிகளை மீட்க படக்குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஹார்ட் டிஸ்கை செயல்படுத்தும் வகையில் அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படத்தில் இரு பாடல்களை இணைக்க படக்குழுவினர் தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக படத்தின் இசையமைப்பாளர் AR ரஹ்மானை அணுகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் இதற்காக தன்னுடைய டேட்சை ஒதுக்கி பாடல்களை கொடுத்து, அதை சூட் செய்து, இதனாலும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் இசை வெளியீடும் டிசம்பரில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி நடக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - எப்போது தெரியுமா..?

More in Cinema News

To Top