Connect with us

“48ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தல தளபதி இயக்குனர் வெங்கட் பிரபு! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!”

Cinema News

“48ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தல தளபதி இயக்குனர் வெங்கட் பிரபு! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!”

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, சின்ன வேடங்களில் நடித்து பின், சென்னை 600028 என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது விஜயை இயக்கி வருகிறார், இயக்குநர் வெங்கட் பிரபு. இன்றைய தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் அவரை நினைவுகூர பல்வேறு விசயங்கள் உண்டு. வாருங்கள் பார்ப்போம். வெங்கட் பிரபு, கங்கை அமரன் – மணிமேகலை தம்பதியினருக்கு நவம்பர் 7 1975ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவருக்கு ராஜலட்சுமி என்னும் மனைவியும், ஷிவானி என்னும் பெண் குழந்தையும் உள்ளனர். இவரது உடன் பிறந்த சகோதரன் தான், நடிகர் பிரேம்ஜி அமரன். இசைஞானி இளையராஜா இவரது சொந்த பெரியப்பா ஆவார். வெங்கட் பிரபு தனது வாழ்க்கையை ஆரம்பத்தில் ஹீரோவாக ஆரம்பிக்க வேண்டும் என சில முயற்சிகள் எடுத்தார். அது தோல்வியில் முடிந்தது. பின் ஏப்ரல் மாதத்தில், ஜி, சிவகாசி, தம்பி, உன்னைச் சரணடைந்தேன் ஆகியப் படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

பின், வெங்கட் பிரபு 2007ஆம் ஆண்டு 11 புதுமுகங்களை வைத்து இயக்கிய சென்னை 600028 மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது. இதன் மூலம்,யதார்த்த காமெடி மூலம் கதை சொல்லும் யுக்தியில் வென்றார். பின்னர், அதே ரூட்டைப் பிடித்து எடுத்த நகைச்சுவை – திரில்லர் படம் தான், சரோஜாவும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் செய்த படம் கோவா, பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு கல்லா கட்டியது.

பின், ஜி படத்தில் அஜித்துடன் கிடைத்த நட்பு மூலமும், இவரது கிரிப்பான திரைக்கதை மூலமும் அமைந்தது தான், மங்கத்தா. அஜித்தின் ஐம்பதாவது படமான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின், இவர் இயக்கிய பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி ஆகியவை சுமாரான வெற்றியைப் பெற்றது. பின், 2016ஆம் ஆண்டு சென்னை 600028 பார்ட் 2வை எடுத்தார், வெங்கட் பிரபு. இப்படமும் ஓரளவு நன்றாகவே கல்லா கட்டியது.

அதன்பின் இவர் இயக்கத்தில் வெளிவந்த சிம்புவின் மாநாடு, 100 கோடிரூபாய் கிளப்பில் இணைந்து வசூல் சாதனைப் புரிந்தது. ஆனால் அடுத்ததாக வந்த, மன்மத லீலை படம் இவரது இயக்கத்தில் வெளிவந்து படுதோல்விப் படமாக அமைந்தது. இவற்றையெல்லாம் தாண்டி, தளபதி 68 என்னும் படத்தை ஓகே செய்து, நடிகர் விஜயை இயக்கி வருகிறார், வெங்கட் பிரபு. இப்படி கிரிக்கெட் கதைக்களத்தில் காமெடி ரூட்டில் பயணித்து, தல – தளபதியின் இயக்குநரான வெங்கட் பிரபுவிற்கு இன்று பிறந்தநாள்.

See also  கோர விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பம் - நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top