Connect with us

பிரபல இந்தி தயாரிப்பாளருடன் இணையும் ரஜினிகாந்த் – வெளியான டக்கர் தகவல்

Cinema News

பிரபல இந்தி தயாரிப்பாளருடன் இணையும் ரஜினிகாந்த் – வெளியான டக்கர் தகவல்

வேட்டையன்படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது பிரபல இந்தி தயாரிப்பாளருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவின் உச்சம் தொட்ட நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவரது நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் முழு வீசியில் உருவாகி வருகிறது.

ஞானவேல் இயக்கம் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த் இந்த படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரபல இந்தி தயாரிப்பாளருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இந்தி தயாரிப்பாளரும் இயக்குநருமான சஜித் நாடியத்வாலாவை நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் சந்தித்து பேசியுள்ளார் . இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை சஜித் நாடியத்வாலா வெளியிட்டுள்ளார்.

இதனால் இந்த இருவரும் கூட்டணி அமைத்து புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் ரன்குவிப்பை தடுக்குமா கொல்கத்தா..? டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Cinema News

To Top