Connect with us

ராத்திரி 12 மணிக்கு சிகரெட் அடித்தபடியே கதவை தட்டிய ரஜினி! காரணம் என்ன தெரியுமா?

Featured

ராத்திரி 12 மணிக்கு சிகரெட் அடித்தபடியே கதவை தட்டிய ரஜினி! காரணம் என்ன தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிவகுமாருக்கு இடையே ஒரு நெருக்கமான நட்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில், ஒரு மேடை நிகழ்ச்சியில் சிவகுமார் ரஜினியை பற்றி பேசினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியது என்னவென்றால்… “ரஜினிகாந்த் சினிமா கல்லூரியில் இருந்தபோது, இயக்குநர் கே. பாலச்சந்தர் ஒரு நிகழ்ச்சிக்காக அங்கே வந்தார்.

அப்போது அவர் ரஜினியிடம் ஒரு கேள்வி கேட்டார் – ‘ஒரு நடிகரிடம் நடிப்பை தவிர்த்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ ரஜினி பதிலாக சொன்னார் – ‘நடிகன் எப்போதும் வெளியே நடிக்கக்கூடாது’ என்று. அந்த பதிலால் கவரப்பட்ட பாலச்சந்தர், ‘நாளை என் அலுவலகத்துக்கு வா’ என்றார்.

அடுத்த நாள் ரஜினி அவரை சந்தித்தார். பாலச்சந்தர், ‘ஏதாவது நடித்து காண்பி’ என்று சொன்னார். ரஜினி, சிவாஜியின் கட்டபொம்மன் வசனங்களை பேசியதைக் கேட்டு, பாலச்சந்தர் சொன்னார் – ‘சிவாஜி ஒருவர் இருக்கிறார். நீ சொந்தமாக நடித்து காண்பி.’

அதற்குப் பிறகு, ரஜினி ஒரு வித்தியாசமான நடிப்பைச் செய்தார். அதில் ஈர்க்கப்பட்ட பாலச்சந்தர், ‘நீ என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறாய்?’ என்று கேட்டார். ரஜினி, ‘வில்லனாக நடிக்க ஆசை. அப்போதுதான் நடிப்பில் வெரைட்டி காட்ட முடியும்’ என்று பதிலளித்தார். இதையடுத்து அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் போன்ற படங்களில் அவரை தேர்வு செய்தார்.

மூன்று முடிச்சு படப்பிடிப்பின் போது, ரஜினி மிகவும் பதற்றத்தில் இருந்தார். இரவு 12 மணிக்கு, சிகரெட் பிடிக்கும்போது, உதவி இயக்குநர் ஷர்மாவின் கதவை தட்டி, ‘இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாக வருவேனா?’ என்று கேட்டாராம்.

அதிலிருந்து தான் ரஜினியின் சிகரெட் ஸ்டைல் கவனிக்கப்பட்டது. பாலச்சந்தர், ‘சிகரெட்டை எவ்வளவு வித்தியாசமாக பிடிக்கலாம் எனக் காண்பி’ என்று கூற, ரஜினியும் பல ஸ்டைல்களில் காட்டினார். அந்த ஸ்டைல்கள், அவரது படங்களில் இடம் பெற்றது.”

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ‘கூலி’ திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது, ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top