Connect with us

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து! குட் பேட் அக்லி ரிலீஸ்… அடுத்து ப்ளாக் பஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ்!

Featured

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து! குட் பேட் அக்லி ரிலீஸ்… அடுத்து ப்ளாக் பஸ்டர் திரைப்படம் ரீ ரிலீஸ்!

முன்னணி நடிகர் அஜித் நடிப்பில், நாளை “குட் பேட் அக்லி” திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படத்திற்கு மக்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஆண்டில் ஏற்கனவே “விடாமுயற்சி” படம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது “குட் பேட் அக்லி” படம் ரிலீஸாகும் நிலையில், அஜித் ரசிகர்களுக்கு இது இரட்டை சந்தோஷமாக இருக்கிறது. மேலும், அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிசயமான தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற மே 1ம் தேதி, அஜித் நடித்த புகழ்பெற்ற திரைப்படம் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை இயக்கியது ராஜிவ் மேனன். இதில் அஜித்துடன் மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரியங்கா மோகனின் பிறந்தநாளில் ‘AGS 29’ படக்குழு வெளியிட்ட பிரெய்லி போஸ்டர்: கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு

More in Featured

To Top