Connect with us

ரஜினி இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு – அண்ணாமலை கொடுத்த பகீர் பேட்டி

Featured

ரஜினி இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு – அண்ணாமலை கொடுத்த பகீர் பேட்டி

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பேசியிருப்பது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது .

பிரபல தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது :

ரஜினி சார் ஒரு நாள் எனக்கு கால் பண்ணாங்க ; இந்த மாதிரி உங்க இன்டர்வியூ பார்த்தேன் ; ரொம்ப நல்லா இருந்துச்சு நல்லா பேசினீங்க சார் என்று சொன்னார். அவர் ஒரு நல்ல மனிதர் என்னை அவர் சார் என்று அழைத்தார்.

நான் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த நேரம் அது. அவர் என்னை பார்க்க வேண்டுமென்றார். நான் அவரிடம் நேரம் வாங்கி அவரை சந்திக்க சென்றேன். அவருடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. அவர் ஒரு தனித்துவமானவர். யாரையும் எந்த விதத்திலும் காயப்படுத்தக்கூடாது என்று எண்ணுபவர்.

அரசியல் என்றால் ஒருவரை எதிர்க்க வேண்டும் . நாம் சொல்லும் கருத்தை மற்றொருவர் ஏற்க மாட்டார்.. அதுதான் அரசியல். அப்படி ஒரு காரமான வார்த்தையை கூட யாரையும் பார்த்து பிரயோகப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் ரஜினி சார்.

ரஜினி சார் அரசியலுக்கு வருவாங்க, வந்து இத பண்ணுவாங்க அப்படிங்கறது என்ன பொறுத்தவரைக்கும், இப்ப இருக்குற இந்த டாக்ஸிக் அரசியல் உலகில் அவருக்கு சுத்தமா செட்டாகாது. சிம்பிளா சொல்லணுனா அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “திரையுலகில் அவரை தடுக்க முயற்சி! 😨 பிருத்விராஜ் தாயார் Shock Statement!”

More in Featured

To Top