Connect with us

அழகுக்காக எதுவும் செய்ய மாட்டேன் – ரகுல் ப்ரீத் சிங் போல்ட் டாக்..

Featured

அழகுக்காக எதுவும் செய்ய மாட்டேன் – ரகுல் ப்ரீத் சிங் போல்ட் டாக்..

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலராக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்போது ஹிந்தியில் De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், சினிமாவில் தனது 15 வருடங்களைக் கடந்து நிறைவுபெற்றதை கொண்டாடும் பேட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அழகு குறித்து அவர் பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்தது.

“அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எதுவும் செய்ததில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. கடவுள் எனக்கு அழகிய முகத்தை கொடுத்துள்ளார். ஆனால், யாராவது அழகாக இருக்க அறுவை சிகிச்சை செய்ய விரும்பினால், அதில் தவறேதும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Sundar C Thalaivar173 OUT! அடுத்த நிமிஷமே கமல்–குஷ்பூ நேரில் சந்திப்பு… என்ன காரணம்?”

More in Featured

To Top