அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் . இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘புஷ்பா: தி ரைஸ்’.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பல மொழிகளில் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .
இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது . இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
இந்த படத்திலும் ஏரளமான முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மிரட்டலான தோற்றத்துடன் காட்சிப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனின் காட்சிகள் பார்க்கவே மிரளவைத்துள்ளது . இதோ அந்த டீசரை பார்த்து எப்படி இருக்கிறது என்பதை சொல்லுங்கள்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
Draupadi 2 திரைப்படத்தில் ரக்ஷனா இந்துசூடன் முக்கிய கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரிச்சர்ட் ரிசி நடிக்கும் இந்த...
‘மாநாடு’ பற்றி நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மிகுந்த உணர்ச்சியில் ஆழ்ந்தார். படத்தை தொடங்கி வெளியீட்டுக்கு கொண்டு வரும் வரை...
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்ததன்படி, அஜித் குமாரின் அடுத்த படத்திற்கான அனைத்து முன் தயாரிப்புகளும் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளன. ‘குட் பேட்...
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெருநாய்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் தனது முடிவான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நிவேதா பேதுராஜ். தமிழ்நாட்டில் மட்டும் சுமார்...
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது புகைப்படம், பெயர், “இசைஞானி” பட்டப்பெயர்...