Connect with us

புஷ்பா 2: The Rule – OTT ரிலீஸ் தேதி வெளியீடு..

Featured

புஷ்பா 2: The Rule – OTT ரிலீஸ் தேதி வெளியீடு..

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: The Rise திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படம், அதன் கதை, பாடல்கள், பஞ்ச் வசனங்கள், காதல் காட்சிகள் போன்றவற்றுக்காக மிகவும் பிரபலம் பெற்றது.

இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான புஷ்பா: The Rule 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. படத்தின் வெளியான 6 நாட்களில் ரூ. 1000 கோடி வசூலை எட்டியிருக்கிறது, மேலும் தற்போது வரை இப்படம் ரூ. 1,409 கோடி வரை வசூல் செய்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு, 2025 ஜனவரி 9 ஆம் தேதி, புஷ்பா 2 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top