Connect with us

அடே சுபாஸே இன்னும் 100 நாட்கள் தான் – வெளியானது புஷ்பா 2 படத்தின் அப்டேட்..!!

Cinema News

அடே சுபாஸே இன்னும் 100 நாட்கள் தான் – வெளியானது புஷ்பா 2 படத்தின் அப்டேட்..!!

அல்லு அர்ஜுனின் மிடுக்கான நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் . இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படமே ‘புஷ்பா: தி ரைஸ்’.

சுகுமார் இயக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்திலும் ஏரளமான முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நேரத்தில் தற்போது இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ‘இன்னும் 100 நாட்கள்’ புஷ்பாவை காண தயாராகுங்கள் என படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top