Connect with us

இன்று திருமணம் செய்துகொண்ட பிரியங்கா தேஷ்பாண்டே – கணவர் யார் தெரியுமா?

Featured

இன்று திருமணம் செய்துகொண்ட பிரியங்கா தேஷ்பாண்டே – கணவர் யார் தெரியுமா?

இந்த பெயரை கேட்டாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது – விஜய் டிவியின் பாபுலர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. ஒரு தொகுப்பாளினியாக தன்னை மெதுவாக வளர்த்துக்கொண்டு வந்த பிரியங்கா, இன்று எந்த நிகழ்ச்சியையும் அழகாக நடத்தும் திறமை பெற்றிருக்கிறார்.

விஜய் டிவியில் மாகாபாவுடன் சேர்ந்து அவர் தொகுத்து வழங்கும் “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பாடல் நிகழ்ச்சி தான் என்றாலும், இவர்கள் இடையே நடக்கும் காமெடிகள் பலரையும் கவர்ந்துவிட்டது. இதைத் தவிர, “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியையும் பிரியங்கா தற்போது வெற்றிகரமாக தொகுத்து நடத்தி வருகிறார்.

இவ்வளவு பிஸியாக இருந்த பிரியங்கா, இன்று வசி என்பவருடன் சைலன்டாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை பிரியங்கா இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. விரைவில் அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்வாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொன்ராம் இயக்கிய ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

More in Featured

To Top