Connect with us

அடுத்தவர்களுக்கு வழி விடுவது முக்கியம்! பிரியங்கா பற்றி திவ்யதர்ஷினியின் கருத்து..

Featured

அடுத்தவர்களுக்கு வழி விடுவது முக்கியம்! பிரியங்கா பற்றி திவ்யதர்ஷினியின் கருத்து..

தமிழ் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக உள்ள தொகுப்பாளினி டிடி, அதாவது திவ்யதர்ஷினி. பள்ளி படிப்பின் போது விஜய் டிவியில் அறிமுகமான இவர், முதன்முதலில் “உங்கள் தீர்ப்பு” என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினியாக துவங்கி பிரபலம் ஆன அவர், தப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

விஜய் டிவியில் “ஜோடி நம்பர் ஒன்”, “பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளையும் சூப்பராக தொகுத்து வழங்கினார். இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி “காஃபி வித் டிடி” தான். பின்னர் உடல் நிலை காரணமாக சில காலம் பிரச்சனைகளுக்கிடையில் இருந்தார். சமீபத்தில், மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இந்நிலையில், திவ்யதர்ஷினி பிரியங்கா குறித்து பெருமையாக கூறியதற்கான விஷயம் தற்போது மிகவும் பேசப்பட்டு வருகிறது. அவர் கூறியதாவது, “எனக்கு பிரியங்காவை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது. எந்த இடத்திலும் இறங்கி அடித்து வேலை செய்யும் நபர் பிரியங்கா. எங்களை பார்த்து மேலே வந்ததாக அவர் கூறினார். பொதுவாக, நாம் அடுத்தவர்களுக்கு வழி விடுவது தப்பு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அழகுக்காக எதுவும் செய்ய மாட்டேன் – ரகுல் ப்ரீத் சிங் போல்ட் டாக்..

More in Featured

To Top