Connect with us

ஹாட்ரிக் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் – ‘டியூட்’ படத்தால் 100 கோடி கிளப்பை நோக்கி பாயும் மாபெரும் வெற்றி! 🚀🔥

Cinema News

ஹாட்ரிக் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் – ‘டியூட்’ படத்தால் 100 கோடி கிளப்பை நோக்கி பாயும் மாபெரும் வெற்றி! 🚀🔥

தமிழ் சினிமாவின் இளம் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹாட்ரிக் வெற்றியைப் பரிசளித்துள்ளது சமீபத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படம். ஏற்கனவே அவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ மற்றும் நடித்துள்ள ‘டிராகன்’ ஆகிய இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘டியூட்’ படமும் பிரதீப்புக்கு மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது.

பிரதீப் ரங்கநாதனின் படங்கள் குறைவான பட்ஜெட்டில் உருவாகி, பாக்ஸ் ஆபிஸில் அதிக லாபத்தை அள்ளித் தருவதால், அவரை வைத்துப் படமெடுக்கத் தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இவரை ரசிகர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், பிரதீப் ரங்கநாதன் நடிகர் பாக்கியராஜ், எஸ்.ஜே.சூர்யா, தனுஷ் ஆகிய மூவரும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறார்.

சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே ‘டியூட்’ படத்திற்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சாதியவாதிகளுக்கும், பிற்போக்குச் சிந்தனை கொண்டவர்களுக்கும் எதிரான ஒரு விஷயத்தை, கமர்ஷியல் சினிமாவில் கையாண்டிருக்கிறார்கள். ‘பிரேமலு’ படம் மூலம் இளசுகளின் கனவுக்கன்னியாக மாறியிருக்கும் நடிகை மமிதா பைஜூ இந்தப் படத்திற்குப் பெரிய பலமாக இருக்கிறார். மேலும், சாய் அபயங்கரின் இசை இளம் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒருபுறம் ‘பைசன்’, ‘டீசல்’ போன்ற படங்கள் வெளியாகியிருந்தாலும், கமர்ஷியல் சினிமாவை விரும்பும் ரசிகர்களின் முதன்மைத் தேர்வாக ‘டியூட்’ படமே இருக்கிறது.

முதல் 4 நாட்கள் வசூல் ‘டியூட்’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே உலகமெங்கும் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, இப்படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது, இந்தப் படத்தின் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படம் வெளியான 4-வது நாளான நேற்று, இந்தியாவில் மட்டும் இப்படம் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக Sacnilk இணையதளம் பதிவிட்டுள்ளது. வெளிநாடுகளில் அதே தொகையை வசூல் செய்திருந்தால், படத்தின் மொத்த வசூல் ரூ. 80 கோடியைத் தாண்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதன் மூலம், இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் படம் 100 கோடியைத் தாண்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருவது, அவரைத் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ‘வெற்றி நாயகனாக’ மாற்றி வருகிறது.

See also  Fans mood: இது தான் தீபாவளி gift-ஆ? மொக்கை வாங்கிய பிரதீப்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top