Connect with us

ஷாருக்கானின் ஜவான் வசூலை போகிறபோக்கில் தூக்கியடித்த பிரபாஸின் கல்கி – வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

Cinema News

ஷாருக்கானின் ஜவான் வசூலை போகிறபோக்கில் தூக்கியடித்த பிரபாஸின் கல்கி – வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

நடப்பாண்டில் திரையரங்குகளில் அதிக வசூல் செய்த படமாக வலம் வரும் பிரபாஸின் கல்கி 2898 AD திரைப்படம் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூலை போகிறபோக்கில் அசால்டாக முந்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மிக்க வைக்கும் பொருட் செலவில் தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படமே கல்கி 2898 AD.

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான இப்படத்தில் இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பட்டானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர்.

இப்படம் முதல் நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்று 1000 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில் நடப்பாண்டில் திரையரங்குகளில் அதிக வசூல் செய்த படமாக வலம் வரும் கல்கி 2898 AD திரைப்படம் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூலை போகிறபோக்கில் அசால்டாக முந்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘ஜவான்’ படத்தின் இந்திய வசூலான 760 கோடியை 40 நாட்களில் வசூல் செய்து கலக்கியுள்ளது ‘கல்கி’. இந்தியில் சுமார் 350 கோடி, தெலுங்கில் 335 கோடி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 75 கோடி வசூலை கல்கி திரைப்படம் குவித்துள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top