Connect with us

புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் நினைவுகள் – விஜயகாந்தை நினைவு கூறிய சரத்குமார்

Cinema News

புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் நினைவுகள் – விஜயகாந்தை நினைவு கூறிய சரத்குமார்

“கொம்பு சிவி” திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார், தன்னுடைய திரையுலகப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்களை நினைவுகூர்ந்தார். குறிப்பாக “புலன் விசாரணை” மற்றும் “கேப்டன் பிரபாகரன்” ஆகிய படங்களில் நடிகர் விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் குறித்து அவர் உருக்கமாக பேசினார். அந்த காலகட்டங்களில் விஜயகாந்தின் பணியாற்றும் பாணியும், மனிதநேயமும் அனைவரையும் கவர்ந்ததாக சரத்குமார் கூறினார்.

செட்டில் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர் என வேறுபாடு பாராமல் அனைவரையும் சமமாக மதித்து பழகுவது விஜயகாந்தின் மிகப்பெரிய தனிச்சிறப்பாக இருந்ததாகவும், ஒவ்வொருவரின் உழைப்புக்கும் அவர் அளித்த மரியாதை தனித்துவமானது என்றும் சரத்குமார் குறிப்பிட்டார். அந்த அனுபவங்கள் இன்றும் தனது மனதில் ஆழமாக பதிந்துள்ளன என்றும், விஜயகாந்த் என்ற மனிதர் திரையுலகில் என்றும் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசத்தலான லுக்கில் கிகி விஜய் – வைரலான லேட்டஸ்ட் போட்டோஷூட் 📸✨

More in Cinema News

To Top