Connect with us

Fact Check : ஜவஹர்லால் நேரு இந்தியர்களை சோம்பேறி என சொன்னதாக பிரதமர் மோடி சொன்னது உண்மையா?

Jawaharlal_Nehru

Politics

Fact Check : ஜவஹர்லால் நேரு இந்தியர்களை சோம்பேறி என சொன்னதாக பிரதமர் மோடி சொன்னது உண்மையா?

திங்கட்கிழமை நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது காங்கிரசின் ரத்து கலாசாரத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்தியர்களின் உழைக்கும் திறனை கொச்சைப்படுத்தி பேசியதாகக் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது 1959 ஆம் ஆண்டு செங்கோட்டையில் இருந்து நேரு ஆற்றிய உரையை அவர் குறிப்பிட்டு, உலக அளவில் மற்ற நாட்டவர்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் சோம்பேறிகளாகவும், குறைந்த அறிவாளிகளாகவும் இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது தனது உரையில், “செங்கோட்டையில் இருந்து பிரதமர் நேரு சொன்னதைப் படிக்கிறேன். பொதுவாக இந்தியர்களுக்கு மிகவும் கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை, ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அளவுக்கு நாம் உழைக்க மாட்டோம்.

இந்தியர்கள் சோம்பேறிகள் மற்றும் குறைந்த புத்திசாலிகள் என்று நேரு ஜி நினைத்தார் என்பதுதான் இதன் அர்த்தம்” என்று காங்கிரஸ் எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு மத்தியில் கூறினார்.

ஜவஹர்லால் நேரு இந்தியர்களை “சோம்பேறிகள்” என்று கருதியது உண்மையா? நேரு தனது 1959 உரையில் என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

நேரு தனது 1959 சுதந்திர தின உரையில், “இந்தியாவில், கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை. அது நம் தவறு அல்ல, சில சமயங்களில் இதுபோன்ற பழக்கங்கள் உருவாகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், ஐரோப்பியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், ரஷ்யர்கள் அல்லது அமெரிக்கர்கள் போல நாம் கடினமாக உழைக்கவில்லை. அந்த நாடுகள் ஏதோ மாயாஜாலத்தால் வளர்ந்ததாக என்ன வேண்டாம், கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் அவர்கள் முன்னேறியுள்ளனர்.” என்று கூறினார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி, இந்தியர்கள் சோம்பேறிகள் என்ற நேருவின் கருத்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடமும் இருந்ததாக திங்கட்கிழமை மக்களவையில் கூறியிருந்தார்.

“இன்று காங்கிரஸில் உள்ள மக்களைப் பார்க்கும்போது, இந்திரா காந்தியால் நாட்டு மக்களை சரியாக மதிப்பிட முடியவில்லை, ஆனால் காங்கிரஸை முற்றிலும் சரியாக மதிப்பிட்டார் என்று தெரிகிறது” என்று பிரதமர் மோடி மேலும் கிண்டல் செய்தார்.

இந்திரா காந்தி, 1974 இல், இந்தியர்களின் “மனநிறைவு” மற்றும் “தோல்வி மனப்பான்மை” பற்றி பேசினார்.

“துரதிர்ஷ்டவசமாக, சில வேலைகள் முடிந்தவுடன், நாம் மனநிறைவை அடைவது நமது பழக்கமாகிவிட்டது. சில சிரமங்கள் ஏற்படும் போது, நாம் நம்பிக்கை இழக்கிறோம். சில சமயங்களில் முழு தேசமும் ஒரு தோல்வி மனப்பான்மையைக் கடைப்பிடித்தது போல் உணர்கிறது, ஆனால் நம்பிக்கையை விட்டுவிடுவதால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது” என்று அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி கூறினார்.

See also  கோடை மழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதம் - தாமதமின்றி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top