Connect with us

பலத்த பாதுகாப்புடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..!!

Featured

பலத்த பாதுகாப்புடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்துள்ளார் .

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழக வந்துள்ள பிரதமர் மோடிக்கு இன்று உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது .

திருவனந்தபுரத்தில் இவர்ந்து கோவை வந்த பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்றார் .

இதையடுத்து அங்கிருந்து மதுரை வந்தடைந்த பிரதமர் பலத்த பாதுகாப்புடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நாளை 28- 02-24 காலை தான் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்றடைகிறார்.

தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top