Connect with us

சீன உளவாளியாக வந்த புறா – 8 மாத விசாரணைக்கு பின் தெரியவந்த திகில் சம்பவம்..!!

Featured

சீன உளவாளியாக வந்த புறா – 8 மாத விசாரணைக்கு பின் தெரியவந்த திகில் சம்பவம்..!!

சீன உளவாளியாக இருக்கலாம் என பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்ட புறா குறித்து பல மாத விசாரணைக்கு பின் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை துறைமுகத்தில் கடந்தாண்டு மே மாதம் வேதிப்பொருட்கள் கையாளும் இடத்தில் பறந்துகொண்டிருந்த விதிசயமான புறா ஒன்றை சீனாவுக்காக உளவு பார்த்திருக்கலாம் என பிடிக்கப்பட்டது.

புறாவின் காலில் மாட்டப்பட்டு இருந்த 2 வளையங்களில் சீன மொழி போல ஏதோ எழுதியிருந்ததால் அந்த புறா பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த புறாவை 8 மாதங்களுக்கு மேல் தீவிர சோதனை மற்றும் ஆய்வுகள் நடத்தின.

இந்நிலையில் தலையை பிச்சுக்கொண்டு நடைபெற்ற விசாரணையில் அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட புறா தைவான் நாட்டில் பந்தயத்திற்காக பறக்கவிடப்பட்ட புறாவாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இந்த புறா நிச்சயம் உளவு பார்க்க அனுப்பப்பட்ட புறா அல்ல என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்ததன் பேரில் பல மாதங்களுக்கு பிறகு அந்த புறா விடுதலை செய்யப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லோகேஷ் – ரத்னகுமார் மீண்டும் இணைவு | அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு

More in Featured

To Top