Connect with us

திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Featured

திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில், சரக்கு ரயில் மீது மோதி கோரா விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெரம்பூரில் இருந்து இன்று இரவு 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது . அப்போது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது

எஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், மீட்புகுழுவினர் விரைந்துள்ள நிலையில் கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் பிரபுசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Featured

To Top