Connect with us

அஜித்துக்கு கூஜா தூக்கிய பார்த்திபன், விமர்சனங்களால் தாக்கப்பட்ட விஜய்

ajith parthiban

Cinema News

அஜித்துக்கு கூஜா தூக்கிய பார்த்திபன், விமர்சனங்களால் தாக்கப்பட்ட விஜய்

Parthiban: முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் விஜய், ரசிகர்களின் அன்பை சம்பாதித்த பிறகு இருவரும் வெவ்வேறு விஷயங்களில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் விஜய் சினிமாவில் ஜெயித்து காட்டியது போல் அரசியலிலும் ஜெயிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்து விடிவு காலம் பிறக்க முயற்சி எடுப்பேன் என்ற உறுதிமொழிக்கு ஏற்ற மாதிரி அரசியலில் ஜெயிப்பதற்கு போராடி வருகிறார்.

parthiban
parthiban

இன்னொரு பக்கம் அஜித், ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் தனக்கான பாதை எது என்று தீர்மானித்து தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அஜித்துக்கு பிடித்தமான கார் ரேசிங்கில் முழு முயற்சியாக இறங்கி வெற்றி பெற்று வருகிறார். இப்படி இருவரும் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்தாலும் பொதுவான கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்திபன் சமீபமாக அஜித் மற்றும் விஜய் பற்றி சொல்லும் விதமாக பல இடங்களில் அவருடைய கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். அதாவது விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு ஒரே நேரத்தில் வந்த பொழுது பார்த்திபன் சொன்னது என்னவென்றால் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு படத்தை முதலில் பார்ப்பேன். அதற்கு துணிவு தேவை என்று அவருடைய ஸ்டைலில் பதில் கொடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் போது அஜித்தின் போஸ்டர் குறித்து நெட்டிசன்கள் அஜித்தின் தோற்றத்தையும் விஜயின் லியோ படத்தின் தோற்றத்தையும் விவாதிக்கும் விதமாக பல விமர்சனங்கள் வந்தது. அப்பொழுது பார்த்திபன் சொன்னது என்னவென்றால் தரணி போற்றும் தனிப் பெருமை ஸ்டைலுக்குரியவர் அஜித் என்றும் அவருடைய தன்னம்பிக்கையே பாராட்டும் விதமாக பேசி இருந்தார்.

அதே நேரத்தில் விஜயின் அரசியலை பற்றி பேசும் விதமாக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் வெற்றி என்பது எளிதாக யாருக்கும் கிடைக்காது என்று எதிர்மறையாக தாக்கி பேசினார். தற்போது அஜித்துக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பார்த்திபன் கூறியது என்னவென்றால் ரசிகர் மீது உண்மையான அக்கறை கொண்டவர்.

எதற்குமே சஞ்சலம் இல்லாத மனிதர், சினிமாவிலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மீதும் கவனம் கொண்டு அதன்படி போகிற ஒரே மனிதர். சினிமா புகழையும் ரசிகர் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். அவரை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டவர் என்று அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி விஜயை எதிர்மறையாக விமர்சித்து பார்த்திபன் பேசியிருக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top