Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : தங்கம் வென்ற வீரருக்கு நேர்ந்த சோக சம்பவம்..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : தங்கம் வென்ற வீரருக்கு நேர்ந்த சோக சம்பவம்..!!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற இத்தாலி நாட்டை சேர்ந்த வீரருக்கு ஏற்பட்ட சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி மீது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது .

உலககெங்கும் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் இம்முறை மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்று அவரவர் விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர் .

இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் தாமஸ் செக்கோன் தனது நாட்டிற்காக தங்கம் வென்று அசத்தினார் . இதையடுத்து அவரது அறைக்கு ஓய்வெடுக்க சென்றபோது தாமஸ் தங்கியுள்ள இடத்தில் AC இல்லாததால் வெப்பம் தாங்க முடியாமல் அருகில் உள்ள பூங்காவின் மரத்தடியில் உறங்கியுள்ளார்.

இதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது .

இதைதடுத்து தங்கம் வென்ற சாம்பியன் மரத்தடியில் படுத்து உறங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது பலரும் பாரிஸ் ஒலிம்பிக் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை தடுக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்..!!

More in Featured

To Top