Connect with us

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும் — ‘பறந்து போ’ குறித்து டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனரின் விமர்சனம்..

Featured

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும் — ‘பறந்து போ’ குறித்து டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனரின் விமர்சனம்..

இயக்குனர் ராம், தனது படைப்புகள் மூலம் மக்களின் மனதில் சிறந்த இடம் பெற்றவர். இவர், நடிகர்கள் சிவா மற்றும் அஞ்சலியை முக்கிய கதாபாத்திரங்களில் வைத்து “பறந்து போ” என்ற படம் இயக்கியுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவின் உணர்வுகளை மையமாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வரும் ஜுலை 4ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. வெளியீட்டுக்கு முன்னதாக, பல சினிமா பிரபலங்கள் இதனைப் பார்த்து பாராட்டியுள்ளனர்.

அண்மையில், “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவின் இந்த படம் பற்றி தனது கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அவர், “இயக்குனர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்தை பார்த்தேன். இது அபாரமான படம். என் இதயம் நிறைந்துவிட்டது. நகைச்சுவையும் உணர்ச்சிகளும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. இந்த படம் உங்கள் மனதில் நிற்கும். சிறந்த படத்தை தவறவிடாதீர்கள்” என தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top