Connect with us

இந்த வாரம் வெளியாகும் புதிய OTT திரைப்படங்கள் – ரசிகர்களுக்கான லிஸ்ட் இதோ!

Featured

இந்த வாரம் வெளியாகும் புதிய OTT திரைப்படங்கள் – ரசிகர்களுக்கான லிஸ்ட் இதோ!

திரையரங்குகளில் வெள்ளிக்கிழமைகளில் திரைப்படங்கள் வெளியாகும் வழக்கைப் போலவே, ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT தளங்களில் புதிய படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்தெந்த OTT தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் கீழே பார்ப்போம்.

‘படைத் தலைவன்’ – டெண்ட்கொட்டா OTT-ல் வெளியீடு: விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள படம் படைத் தலைவன். இப்படம் நாளை, ஜூலை 18ஆம் தேதி டெண்ட்கொட்டா OTT தளத்தில் வெளியிடப்படுகிறது. இப்படம், திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.

‘குபேரா’ – அமேசான் பிரைம் தளத்தில் வருகை: தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குபேரா. இதில் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார். தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் நாளை, ஜூலை 18ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

‘DNA’ – ஜியோ ஹாட்ஸ்டார்-ல் வெளியாகும் தேதி உறுதி: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான படம் DNA. அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் இணைந்து நடித்துள்ள இப்படம், கடந்த ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது, இப்படம் ஜூலை 19ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா தேர்வு – வாய்ப்பு தவறியதாக சுதா கொங்கரா தகவல்

More in Featured

To Top