Connect with us

“ONE LAST TIME” – வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

Cinema News

“ONE LAST TIME” – வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் முழு மூச்சில் இறங்க உள்ள நிலையில் தற்போது அவர் நடிக்கும் கடைசி படம் குறித்த அப்டேட் வெளியாகி கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இதுவரை 68 படைகளில் நடித்துள்ள நடிகர் ஏரளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து எண்ணற்ற ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் நடிக்க போகும் அவரது கடைசி படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

விஜய்யின் கடைசி படத்தை அ. வினோத் இயக்க உள்ளதாக முன்னபே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

அதன்படி விஜயின் கடந்த கால படங்களிலுள்ள அவரது அறிமுக சீன்களை எடிட் செய்து தங்களின் முதல் தமிழ் பட அறிவிப்பு குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளது.

5 நிமிடம் நீளம் கொண்ட அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தற்போது கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் வீட்டில் இருந்து வெளியேற பெண் போட்டியாளர் - வெளியான ஷாக்கிங் தகவல்..!!

More in Cinema News

To Top