Connect with us

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது – சவால் விட்ட ஈபிஎஸ்

Featured

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது – சவால் விட்ட ஈபிஎஸ்

எதிர் வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :

.இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது; அதிமுக சின்னத்தை முடக்குமாறு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

அதிமுகவின் குரல் நாடாளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும்; வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும்; மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அதிமுக கூட்டணி முடிவாகும்.

திமுக கூட்டணியில் இருந்து எத்தனைக் கட்சிகள் வெளியேறும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனநாயக நாட்டில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top