Connect with us

“இனி போராட சக்தி இல்லை” மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வினேஷ் போகத்..!!

Featured

“இனி போராட சக்தி இல்லை” மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வினேஷ் போகத்..!!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெறித்தனமாக விளையாடி இறுதி போட்டி வரை கெத்தாக முன்னேறி வந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிறந்ததில் இருந்து மல்யுத்த விளையாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து பல சோதனைகளை கடந்து சாதித்த இளம் பெண் வீராங்கனை தான் வினேஷ் போகத். குழந்தை பருவத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு சண்டையிட்டு வந்த இந்த இளம் வீராங்கனை இன்று மனமுடைந்து தனது ஓவை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை அதிபயங்கரமாக களத்தில் சிங்கம் போல் எதிரிகளை எதிர்கொண்ட வினேஷ் போகத் நடப்பு ஒலிம்பிக் தொடரில் காலிறுதி போட்டியில் இலக்கில் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் .

அரையிறுதி போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் . பலநாள் கனவு நிறைவேற போகிறது எந்த மகிழ்ச்சியில் இருந்து போட்டிக்காக காத்திருந்த வினேஷ் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தங்கம் வென்று நாட்டை பெருமைப்படுத்தலாம் என காத்திருந்த அவருக்கு இது மிகுந்த வலியை கொடுத்தது . இந்நிலையில் மனமுடைந்து இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வினேஷ் போகத் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

அம்மா என்னை மன்னித்து விடுங்கள்… உங்கள் கனவு, எனது தைரியம் எல்லாம் உடைந்துவிட்டது. இதற்கு மேல் எனக்கு வலிமை இல்லை…GOODBYE WRESTLING 2001-2024 என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா: புதிய வீடியோ இணையத்தில் வைரல்!

More in Featured

To Top