Connect with us

“வைரலாகிவரும் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ படத்தின் Title Announcement Video!”

Cinema News

“வைரலாகிவரும் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ படத்தின் Title Announcement Video!”

பிருத்வி ராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜன கண மன’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அடுத்ததாக நிவின் பாலி உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்துக்கு ‘மலையாளி From India’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிவின் பாலி தவிர, தயன் ஸ்ரீனிவாசன், அனஸ்வாரா ராஜன், ஷைன் டைம் சாக்கோ போன்ற பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான முறையில் அதேநேரம் ஜனரஞ்சகமாக உள்ள இந்த டைட்டில் வீடியோ வைரலாகி வருகிறது. படத்தின் தன்மையை ப்ரொமோவில் ஜனரஞ்சகமாக வெளிப்படுத்தியுள்ளனர் நிவின் பாலியும், படத்தின் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியும்.

மலையாளத்தில் கடந்த சில வருடங்களாக காமெடி பக்கம் திரும்பாமல் சீரியஸான படங்களே செய்துகொண்டிருந்த நிவின் பாலி மீண்டும் ஒரு என்டர்டெயினராக களமிறங்கும் படம் என்று அறிவிப்புடன் “மலையாளி From India” படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது.

அதேநேரம் ‘ஜன கண மன’ திரைப்படத்தில் அரசியலை நேரடியாக பேசியிருந்த டிஜோ ஜோஸ் ஆண்டனி, இந்த டைட்டில் வீடியோவை அரசியல் சட்டயருடன் முடித்திருப்பதும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இது பான் இந்தியா படமல்ல, மலையாளத்தில் மட்டும் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இந்த டைட்டில் வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top