Connect with us

OTTயில் ‘Animal’ படத்தின் Run Time இவ்வளவு அதிகமா?! லேட்டஸ்ட் தகவல்!

Cinema News

OTTயில் ‘Animal’ படத்தின் Run Time இவ்வளவு அதிகமா?! லேட்டஸ்ட் தகவல்!

திரையரங்குகளில் வெளியாகும் போது 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருந்த படம் ஓடிடியில் இன்னும் அதிக நேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த ’அனிமல்’ திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது என்பது தெரிந்ததே. மேலும் பெண்களுக்கு எதிரான படம் என்று இந்த படத்திற்கு விமர்சனம் வந்தபோதிலும் இந்த படத்தின் வசூல் உலகம் முழுவதும் மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் வங்கா சமீபத்தில் அளித்த பேட்டியில் ’கடைசி நேரத்தில் டப்பிங் பணிகள் முடிவடையாததால் 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், ஓடிடியில் வெளியாகும் போது இந்த 9 நிமிட காட்சிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இந்த படம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்ற நிலையில் தற்போது இந்த 9 நிமிடங்களை சேர்த்தால் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைமாக ஓடிடியில் வரும் என்று குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஓடிடியில் அடுத்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு..!!

More in Cinema News

To Top