Connect with us

விஷால் நடிக்கும் புதிய படத்தில் இருந்து வெளியான வேற லெவல் அப்டேட் – டக்கர் போஸ்டர் இதோ

Cinema News

விஷால் நடிக்கும் புதிய படத்தில் இருந்து வெளியான வேற லெவல் அப்டேட் – டக்கர் போஸ்டர் இதோ

ஹரி மற்றும் விஷால் காம்போவில் உருவாகி வரும் ரத்னம் என படத்தில் இருந்து சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு பெயர் போன இயக்குநராகவும் நடிகராகவும் விளங்குபவர்கள் ஹரி மற்றும் விஷால். இந்நிலையில் இவர்கள் இருவருமே தற்போது ஒரே படத்தில் கமிட்டாகி குழுவாக செயல்பட்டு வருகின்றனர் .

நீண்ட நெடு நாட்களுக்கு பின் மார்க் ஆண்டனி என்ற சூப்பர் டூப்பர் வெற்றி படத்தை கொடுத்த விஷால் தற்போது தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கைகோர்த்துள்ள படத்தின் பெயர் தான் ரத்னம் . இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் நடிக்கிறார் .

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றி வரும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் கனல் கனல்கண்ணனை இப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் இருந்து சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை அழகிய போஸ்டர் மூலம் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி ‘ரத்னம்’ படத்தின் முதல் பாடலான ‘வாராய் ரத்னம்’ நாளை காலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது மேலும் இப்படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பட்ட அடிக்கு பழிதீர்க்குமா CSK..? சேப்பாக்கத்தில் இன்று சென்னை - லக்னோ அணிகள் மோதல்..!!

More in Cinema News

To Top