Connect with us

இந்த வார ஸ்பெஷல் ரிலீஸ்…தீபாவளி முடிந்தும் சரவெடியாக வரும் படங்கள்!

Cinema News

இந்த வார ஸ்பெஷல் ரிலீஸ்…தீபாவளி முடிந்தும் சரவெடியாக வரும் படங்கள்!

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் முதன்மை பாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரம், டிடி, ராதிகா, மாயா உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம்…இப்படம் இந்த வாரம் 24ஆம் தேதி வருகின்றது..

காமெடி நடிகராக உச்சம் தொட்டவர் தான் நடிகர் சந்தானம் அவர்கள் என்று சொல்லலாம்…நடிகர் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்கிற படத்தின் மூலம் தமிழ்த்திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்…இப்படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து முடித்துள்ளார் அவர்…இவரின் அடுத்த படமான 80ஸ் Buildup இந்த படம் இந்த வார இறுதியில் வர இருக்கின்றது..

80s Buildup

டீவியின் மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ்…இவர் முதன் முதலில் தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கினார்…அதில் இவருக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைத்தது..அதன் பின் அப்படியே வாழ்க்கை மாறியது..படங்கள் Biggboss என பிஸி ஆகிவிட்டார்..இப்போது இவர் நடிப்பில் Joe வரவிருக்கின்றது..இப்படம் இந்த வாரத்தின் இறுதியில் வர உள்ளது..

Joe

கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த யோகி பாபுவுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வர, காதலியின் அண்ணன், மாடு மேய்க்கிறவனுக்கு பெண் தரமாட்டேன் என்று கூறிவிடுகிறார். இதனை அடுத்து கோபத்தில் அவர் சவுதி சென்று பணக்காரராக யோகிபாபு மாறிவிடுகிறார்…இதன் பின் கதை எப்படி மாறுகிறது என்பது கதையாக இருக்கின்றது..இப்படமும் இந்த வார இறுதியில் வர இருக்கின்றது.. குய்கோ

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தமிழ்நாட்டில் தடை – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!!

More in Cinema News

To Top