Connect with us

வெற்றிநடை போடும் நயன்தாராவின் ‘அன்னபூரணி’ திரைப்படம் – 2ஆம் நாள் கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா..!!

Cinema News

வெற்றிநடை போடும் நயன்தாராவின் ‘அன்னபூரணி’ திரைப்படம் – 2ஆம் நாள் கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா..!!

திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தின் 2ஆம் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது . அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.60 லட்சம் வசூலித்த நிலையில் இரண்டாவது நாளில் ரூ.90 லட்சம் வரை வசூலித்துள்ளது. இதுமட்டுமின்றி இனி வரும் வரும் நாட்களிலும் இப்படம் நல்ல வசூலை ஈட்டும் என்றும் திரை துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top