Connect with us

இந்தியா கூட்டணிக்கு அடுத்த பின்னடைவு.. மேலும் ஒரு கட்சி விலகல்

Farooq Abdullah

Politics

இந்தியா கூட்டணிக்கு அடுத்த பின்னடைவு.. மேலும் ஒரு கட்சி விலகல்

இந்தியா கூட்டணி ஏற்கனவே அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில், மற்றொரு அடியாக, வரும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று அறிவித்தார்.

முன்னதாக, இந்தியா கூட்டணிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துவிட்டார், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்து போட்டி என அறிவித்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும், ராஷ்ட்ரிய லோக்தளம் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இது குறித்து பேசிய அப்துல்லா, “நாடாளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று நான் நினைக்கிறேன், தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாட்டுக் கட்சி தனித்து போட்டியிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அடுத்தடுத்து தனித்துப் போட்டி என வெளியேறுவது கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சி வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளை கூட வெல்ல முடியாது எனக் கூறப்படும் நிலையில், இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வியே பிரதானமாக உள்ளது.

இருப்பினும், தேசிய மாநாட்டு கட்சி இந்தியா கூட்டணியின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக விளங்குகிறது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறுகையில், “பேச்சுகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த வரம்புகள் உள்ளன. தேசிய மாநாட்டு மற்றும் பிடிபி ஆகியவை இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளன, மேலும் அது தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in Politics

To Top