Connect with us

“நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் 2nd Single பாடலை பாடிய பிரபல நடிகர்!”

Cinema News

“நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் 2nd Single பாடலை பாடிய பிரபல நடிகர்!”

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய் நடித்து வரும் ‘Thalapathy 68’ திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் தனுஷ் இணைந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’.

இந்த படத்தில் நடிகரும் வெங்கட் பிரபுவுக்கு நெருக்கமானவருமான ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் லீலா, குமாரவேல், விசாலினி, ஐஸ்வர்யா, ஆனந்த், பவானி ஸ்ரீ, RJ விஜய், KPY பாலா, RJ ஆனந்தி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வெங்கட்பிரபுவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இயக்குனர் ஆனந்த் தனது சமூக வலைதளத்தில் தங்களது படத்திற்கு ஒரு பாடலை பாடி கொடுத்த தனுஷ் அவர்களுக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜெயிக்கப்போவது யார்..? - பரபரப்பான கட்டத்தில் டெல்லி - லக்னோ இன்று மோதல்..!!

More in Cinema News

To Top