Connect with us

தேவயானியும் நானும் பிரிந்ததற்கு என் மனைவிதான் காரணமா? – ஓபனாக பேசிய நகுல்..

Featured

தேவயானியும் நானும் பிரிந்ததற்கு என் மனைவிதான் காரணமா? – ஓபனாக பேசிய நகுல்..

தமிழ் சினிமாவில் 90களில் சிறப்பாக பங்களித்த நடிகை தேவயானி, குடும்ப பாங்கான கதைகளில் தனித்துவமாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர். வெள்ளித்திரையில் மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் திறமையை வெளிப்படுத்தியவர். தற்போது, அவரது மகள் இனியா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் “சரிகமபா சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.

தேவயானி இயக்குநர் ராஜ்குமாரை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இதனால் பல வருடங்களாக அவர் தன் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுடன் தொடர்பு வைக்காமல் இருந்தார். ஆனால் சமீப காலமாக, குடும்ப உறவுகள் மீண்டும் இணைந்துள்ளன.

இந்நிலையில், தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது சகோதரி குறித்து தனது மனம் திறந்தார். “தேவயானி ராஜ்குமாரை திருமணம் செய்ததற்கே நான் அவரை ஒதுக்கிவிட்டேன் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். என் மனைவி ஸ்ருதி தான் தேவயானி மற்றும் எனக்குள் இடைவெளியை ஏற்படுத்தினார் என்றும் சிலர் கூறுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும் போது, ஆரம்பத்தில் கோபமாக இருந்தது. ஆனால் இப்போது கேட்கும்போது, ‘என்னடா, சீரியல் டயலாக் மாதிரி பேசுறீங்க’ என்று தான் தோன்றுகிறது,” என்று நகுல் தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியுடன் தேவயானியின் குடும்பத்தில் உள்ள மாற்றங்கள் மற்றும் மீண்டும் உருவாகியுள்ள உறவுப் பிணைப்பு பற்றியும் ரசிகர்களிடம் ஒரு புது பார்வை உருவாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா மந்தன்னா மீண்டும் நிரூபித்தார் – சிறந்த நடிகை விருது!

More in Featured

To Top