Connect with us

🔥 ‘நாங்க நாலு பேரு’ பாடல் ட்ரெண்டிங் – ‘கருப்பு’ படத்தில் RJ பாலாஜியின் ‘பேபி கண்ணன்’ கேரக்டர் கவனம்!

Cinema News

🔥 ‘நாங்க நாலு பேரு’ பாடல் ட்ரெண்டிங் – ‘கருப்பு’ படத்தில் RJ பாலாஜியின் ‘பேபி கண்ணன்’ கேரக்டர் கவனம்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான “நாங்க நாலு பேரு” வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த பாடலின் முக்கிய அம்சமாக, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பெரும்பாலான காட்சிகளில் தோன்றி, தனது ‘பேபி கண்ணன்’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். பாடலின் இறுதியில் மட்டுமே சூர்யா தோன்றுவது ரசிகர்களுக்கு எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த பாடலை சிலம்பரசன், சாய் அபயங்கர் மற்றும் அசல் கோலார் இணைந்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. வெளியான சில நேரங்களிலேயே பாடல் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ள நிலையில், ‘கருப்பு’ படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, RJ பாலாஜியின் கதாபாத்திரம் திரைப்படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top