Connect with us

சீனாவில் மின்னல் வேகத்தில் பரவும் மர்ம காய்ச்சல் – அனைத்து மாநிலங்களுக்கும் அவசர கடிதம் அனுப்பிய மத்திய அரசு

Featured

சீனாவில் மின்னல் வேகத்தில் பரவும் மர்ம காய்ச்சல் – அனைத்து மாநிலங்களுக்கும் அவசர கடிதம் அனுப்பிய மத்திய அரசு

சீனாவில் தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இந்திய மக்களின் நலன் காக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

உலக மக்கள் அனைவரையும் கடந்த 4 வருடங்களாக படாதபாடு படுத்திய கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இருந்து முதன் முதலில் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்து மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவிய இந்த நோய் உலக முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான உயிர்களை கொன்று குவித்தது எங்கு பார்த்தாலும் அழுகை குரல்களும் பிணங்களுமாக இருந்த அந்த காட்சிகளை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து ஓரளவு மீண்டு வரும் நேரத்தில் தற்போது சீன நாட்டில் மர்ம காய்ச்சல் ஒன்று வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா பேரிடருக்குப் பிறகு தற்போது மிகவேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் பீஜிங், லியானிங் மாகாணங்களில் உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்தால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாக வெளி வரும் செய்தார்கள் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சீனாவில் உள்ள குழந்தைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி எழுதியுள்ளது.

புளூ காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஆகியவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் கண்டறிந்து அவ்வப்போது வழங்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும் இணையதளத்தில் தினசரி பதிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Shreya Ghoshal Viral Clicks! ரசிகர்களை கவர்ந்த அழகான Photoshoot 🔥"

More in Featured

To Top