Connect with us

பார்முக்கு திரும்பியது மும்பை அணி – பெங்களூரு அணிக்கு இடையிலான போட்டியில் அசத்தல் வெற்றி..!!!

Featured

பார்முக்கு திரும்பியது மும்பை அணி – பெங்களூரு அணிக்கு இடையிலான போட்டியில் அசத்தல் வெற்றி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய மும்பை அணி பெங்களூரு அணியை கெத்தாக வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் MI – RCB அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக அ விராட் கோலி மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இதில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த கோலி ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் பேட்டிங்கில் அதிரடி காட்டிய டு பிளிஸ்சிஸ் அரைசதம் கடந்து அசத்தினார் .

ஆனால் இந்த பக்கம் ஆட வந்த கிளென் மாக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் மீண்டும் டக் அவுட் ஆக அவரை தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வந்த வழியில் விருட்டென சென்றனர்.

இறுதியில் வந்த தினேஷ் கார்த்திக் மும்பை பந்துகளை சிதறடிக்க அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 196 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர் . இந்த ஜோடி ஆரம்பம் முதல் அதிரடி காட்டியதால் பெங்களூரு அணிக்கு என செய்வதென்றே தெரியவில்லை .

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் 24 பந்துகளுக்கு 38 ரன்கள், இஷான் 34 பந்துகளில் 69 ரன்கள் என பட்டயகிளப்பினர் . பின்னர் 11வது ஓவரில் ரோஹித் ஆட்டமிழக்க , அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்க விட்டார்.

அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பெங்களூரு பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார் , அடுத்து வந்த திலக் வர்மா 16 ரன்கள் எடுக்க 15.3 ஓவர்களிலேயே 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை மும்பை கெத்தாக வீழ்த்தியது.

See also  கில்லி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் - எந்த படம் தெரியுமா..?

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top