Connect with us

சிஎஸ்கே அணியுடன் இணைய சென்னை வந்தடைந்தார் எம்.எஸ்.தோனி..!!

Featured

சிஎஸ்கே அணியுடன் இணைய சென்னை வந்தடைந்தார் எம்.எஸ்.தோனி..!!

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பயிற்சியை மேற்கொள்ள இன்று சென்னை வந்தடைந்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி .

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது .

அதன்படி நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியில் பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் ஆயுத்தமாகி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட அணைத்து அணிகளும் பயிற்சினை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பயிற்சியை மேற்கொள்ள சென்னை வந்தடைந்தது . ஆனால் எம்.எஸ்.தோனி மட்டும் சென்னைக்கு வராமல் இருந்தார்.

இந்நிலையில் அம்பணி குடும்பத்தின் திருமண விழாவை முடித்த கையோடு இன்று சென்னை வந்தடைந்துள்ளார் நம்ப தல தோனி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top