Connect with us

திரையுலகில் 19 ஆண்டுகள் நிறைவு – நடிகை தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!!

Cinema News

திரையுலகில் 19 ஆண்டுகள் நிறைவு – நடிகை தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!!

திரையுலகில் 19 ஆண்டுகள் நிறைவு நடிகை தமன்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. கடந்த 2005 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற ஹிந்தி படத்தில் தமன்னா நாயகியாக அறிமுகமானார்.

இந்த படம் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் மனோஜ் மஞ்சு நடித்த தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். இதனை அடுத்து மூன்றாவது படமாக அவர் தமிழில் ’கேடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அடுத்தடுத்து பல மொழி படங்களில் நடித்து வந்த தமன்னாவுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக்கொண்டே சென்றது .

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தற்போது மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் .’

திரை உலகில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து விட்ட இவர் தற்போது இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார் .

இந்நிலையில் தற்போது திரை உலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை தமன்னாவுக்கு அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசுர பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை அசால்டாக வீழ்த்தியது பெங்களூரு அணி..!!!

More in Cinema News

To Top