Connect with us

“கிரிக்கெட்டுக்கு பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?” – எம்.எஸ்.தோனி என்ன பதில் சொன்னார் தெரியுமா..?

Featured

“கிரிக்கெட்டுக்கு பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?” – எம்.எஸ்.தோனி என்ன பதில் சொன்னார் தெரியுமா..?

கிரிக்கெட்டுக்கு பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எம்.எஸ்.தோனி அளித்துள்ள பதில் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமல்லாமல் உலகில் இருக்கும் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராகவும் வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி . ரசிகர்கள் கொண்டாடும் முடிசூடா மன்னனாக இருந்து வந்த தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் .

இதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இவர் இயற்கை விவசாயம் மற்றும் விவசாய பண்ணை வளர்ப்பு திரைப்பட தயாரிப்பு என பல விதமான வேலைகளை செய்து வருகிறீர்.அதுமட்டுமின்றி இந்திய ராணுவத்தில் உயரிய பதவியிலும் எம்.எஸ்.தோனி இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கிரிக்கெட்டுக்கு பிறகு நீங்க என்ன செய்யப் போகிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு தோனி சுவராஸ்யமான பதிலை கொடுத்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது .

கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு இந்திய ராணுவத்தில் தான் அதிக நேரம் செலவிட விரும்புவதாக எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கைதி 2 நிச்சயம் வரும்!” 💥 Karthi’s Big Announcement at Va Vathiyar Event

More in Featured

To Top