Connect with us

அயலானுடன் வசூல் போட்டி நடத்தும் மிஷன் சாப்டர் 1 – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

Cinema News

அயலானுடன் வசூல் போட்டி நடத்தும் மிஷன் சாப்டர் 1 – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

திரையரங்குகளில் வெளியாகி தாறுமாறான வரவேற்பை பெற்று வரும் அருண் விஜயின் மிஷன் 1 படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர் தான் இயக்குநர் ஏ.எல் விஜய் . இவரது இயக்கத்தில் அருண் விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் கோலாகலமாக வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி மெலோடி நாயகன் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாரானது.

தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் இருக்க , அருண் விஜயின் மிஷன் படமும் இந்த ரேசில் இணைந்தது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் அயலான் உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அருண் விஜயின் மிஷன் படத்துக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்தவகையில் இப்படம் தற்போது வரை ஈட்டியுள்ள வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது .அதன்படி இப்படம் சுமார் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதே போல் தனுஷின் கேப்டன் மில்லர் படம் 90 கோடியும் , சிவகார்த்திகேயனின் அயலான் படம் 65 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை மழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதம் - தாமதமின்றி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top