Connect with us

“நடிகர் அஜித்தின் AK 64 படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல்! Latest தகவல்!”

Cinema News

“நடிகர் அஜித்தின் AK 64 படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல்! Latest தகவல்!”

KGF 1 மற்றும் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக ஒரு தகவல் தீயாக பரவியது. அதுகுறித்த விளக்கத்தை பிரசாந்த் நீல் தரப்பு கூறியுள்ளது.

பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் சலார் OTT ரிலீஸ் டிரெண்டாகி இருந்த நிலையில், அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கப் போவதாக திடீரென தகவல்கள் தீயாக பரவின.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார் வரும் மார்ச் மாதத்துடன் அந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்கப் போவதாக கூறுகின்றனர். அதன் பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK 63 படத்தில் நடிக்க உள்ள அஜித் குமார் அதன் பின்னர் AK 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என பேச்சுக்கள் கிளம்பின.

இயக்குநர் பிரசாந்த் நீல் KGF 3 மற்றும் Salaar 2 படங்களை மட்டுமே இப்போதைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தென்னிந்தியாவில் மற்ற எந்தவொரு முன்னணி நடிகர் படத்தையும் இயக்க அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என அவரது டீம் தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் அஜித் குமாரை பிரசாந்த் நீல் இயக்கப்போவதாக வெளியான தகவல் வெறும் உருட்டு மட்டுமே என்று கூறுகின்றனர். சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு 300 கோடி ரூபாய் சம்பளம் அடுத்த படத்திற்கு கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதுவும் வதந்தி தான் என்றும் அஜித்தின் ஹேட்டர்கள் சமீப காலமாக அஜித் பெயரில் தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருவதாக கூறுகின்றனர். நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தை முடித்து விட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது மட்டுமே தற்போது உறுதியான தகவலாக இருக்கிறது. ஆனால், அஜித்தின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

More in Cinema News

To Top