Connect with us

தளபதி விஜய் போல் குட்டி ஸ்டோரி சொன்ன அமைச்சர் உதயநிதி..!!

Featured

தளபதி விஜய் போல் குட்டி ஸ்டோரி சொன்ன அமைச்சர் உதயநிதி..!!

கிடைக்கும் மேடைகளில் தனது ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி சொல்லி ஊக்கம் கொடுத்து வரும் தளபதி விஜய் போல் தற்போது தனது தொண்டர்களுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லியுள்ள குட்டி ஸ்டோரி செம வைரல் ஆகி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் இளைஞர் மத்தியில் எழுச்சி உரையாற்றிய அமைச்சர் உதயநிதி குட்டி ஸ்டோரி ஒன்றையும் கூறினார் :

‘பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய்; நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று, இதில் பூட்டு என்பது தமிழ்நாடு; சுத்தியல் ஒன்றிய பாஜக அரசு; மக்களின் இதயத்தை தொடும் சாவி திமுக’ என சேலம் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் குட்டிக்கதை சொல்லி இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top